ஈஸ்டர் பண்டிகை முன்னிட்டு ரெயின்போ நகர் புனித ஜான் மரி வியான்னி ஆலயத்திற்கு வைத்திலிங்கம் எம்பி இலவசமாக நாற்காலிகளை வழங்கினார்.
கிறிஸ்தவ மதத்தை சேர்ந்தவர்களுக்கு கிறிஸ்துமஸிற்கு அடுத்து மிக முக்கியமான பண்டிகைகளில் ஒன்று ஈஸ்டர். சிலுவையில் அறையப்பட்டு கல்லறையில் அடக்கம் செய்யப்பட்ட இயேசு கிறிஸ்து, அதிலிருந்து மூன்றாம் நாள் உயிர்த்தெழுந்த தினமே `ஈஸ்டர்’ பண்டிகையாக கொண்டாடப்படுகிறது.
அந்த வகையில் ஈஸ்டர் பண்டிகையை முன்னிட்டு, காமராஜர் நகர் தொகுதிக்குட்பட்ட ரெயின்போ நகர் பகுதியில் உள்ள ஜான் மரி வியான்னி ஆலயத்தில் இன்று சிறப்பு பிரார்த்தனை நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக பாராளுமன்ற உறுப்பினர் வைத்திலிங்கம் கலந்துகொண்டு ஆலயத்திற்கு இலவசமாக 50க்கும் மேற்பட்ட நாற்காலிகளை வழங்கினார்.
இந்த நிகழ்ச்சியில் காங்கிரஸ் கட்சியின் மாநில சிறப்பு அழைப்பாளர் வினோத், தொகுதி பொறுப்பாளர் தேவதாஸ் உட்பட காங்கிரஸ் கட்சியினர் மற்றும் ஏராளமான கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டனர்.
No comments